search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஸ்பெண்டு
    X
    சஸ்பெண்டு

    கரூர் மாணவி தற்கொலை விவகாரம் - காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

    பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கனும் என கரூர் பள்ளி மாணவி கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்து கொண்டார்.
    கரூர்:

    கரூரை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி கடந்த 19-ம் தேதி அன்று தனது வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து புகார் அளிக்கச் சென்ற மாணவியின் உறவினர்களை வெங்கமேடு காவல் ஆய்வாளர் கண்ணதாசன் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. உரிய நேரத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தாயை இரவு நேரத்தில் காவல் நிலையத்தில் அமர வைத்ததாகவும் தெரிகிறது.

    இதுதொடர்பாக, மாணவியின் உறவினர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேலிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஆய்வாளர் கண்ணதாசன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில், வெங்கமேடு காவல் ஆய்வாளர் கண்ணதாசனை நேற்று பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் உத்தரவிட்டார்.

    Next Story
    ×