search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    விதை விற்பனை கடைகளில் விலை பட்டியல் கட்டாயம் - அதிகாரி உத்தரவு

    விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்யும் போது, அவர்களிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு வழங்க வேண்டும்.
    உடுமலை:

    கோவை விதைச்சான்று துறை, விதை ஆய்வு பிரிவு சார்பில் விதை விற்பனையாளர்களுக்கு நடைமுறையில் உள்ள விதை விற்பனை சட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள குறிப்பிட்ட இடைவெளியில் பயிற்சியளிக்கப்படுகிறது. 

    குடிமங்கலம் வட்டார விதை விற்பனையாளர்கள் மற்றும் நாற்று பண்ணை உரிமையாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி பெதப்பம்பட்டி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், நடந்தது. கோவை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம், ‘விதை விற்பனை பதிவேடுகள் பராமரிப்பு, கொள்முதல் பட்டியல் பராமரிப்பு, பதிவுச்சான்று மற்றும் முளைப்பு திறன் பகுப்பாய்வு அறிக்கை பராமரிப்பு குறித்து விளக்கமளித்தார். 


    விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்யும் போது, அவர்களிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு வழங்க வேண்டும். கடைகளில் விதை விலை பட்டியல் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். 

    ஆய்வாளர் விஜயலட்சுமி, விதை விற்பனைக்காகநடைமுறையிலுள்ள, இணைய வழி பதிவேற்றத்துக்கான ‘ஸ்பெக்ஸ்’ மென்பொருள் குறித்து பயிற்சியளித்தார். 

    குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் திருமகள்ஜோதி மற்றும் விதை விற்பனையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். 
    Next Story
    ×