என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலை, தழைகளை ஆடையாக அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காட்சி.
    X
    இலை, தழைகளை ஆடையாக அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காட்சி.

    நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் இலை தழைகளை ஆடையாக அணிந்து நூதன ஆர்ப்பாட்டம்

    ஒரே நாளில் 50 ரூபாய் வரை நூல் விலை உயர்ந்து காணப்படுகிறது.
    திருப்பூர்:

    திருப்பூரில் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த லட்சக்கணக்கான நிறுவனங்கள் இயங்கி வரக்கூடிய சூழ்நிலையில் பின்னலாடை மற்றும் விசைத்தறி தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக உள்ளது நூல். 

    ஆனால் கடந்த சில மாதங்களாகவே நூல் விலை கடுமையாக உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில் எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 50 ரூபாய் வரை நூல் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து ஏற்கனவே தொழில்துறை சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் கவனம் செலுத்தி பருத்தி பதுக்கலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், பருத்தி ஏற்றுமதி செய்வதை நிறுத்தி உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    ஆர்ப்பாட்டத்தின்போது நூல் விலை உயர்வால் பின்னலாடை உற்பத்தி நின்று போகும் சூழலில் மீண்டும் கற்கால மனிதன் போல இலை தழைகளை ஆடையாக அணியும் சூழல் ஏற்படும் என்பதை உணர்த்தும் வகையில் இலை, தழைகளை ஆடையாக அணிந்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
    Next Story
    ×