என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பொறையாறு-செம்பனார்கோவில் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
Byமாலை மலர்16 Nov 2021 8:07 PM IST (Updated: 16 Nov 2021 8:27 PM IST)
பொறையாறு-செம்பனார்கோவில் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளளது.
பொறையாறு:
செம்பனார்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அப்துல் வகாப் மரைக்காயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொறையாறு துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பொறையாறு, தரங்கம்பாடி, சந்திரபாடி, திருக்கடையூர், பிள்ளைபெருமாநல்லூர், திருமெய்ஞானம், சங்கரன்பந்தல், குட்டியாண்டியூர், பெருமாள் பேட்டை, வெள்ளைக்கோவில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, மாணிக்கப்பங்கு, என்.என்.சாவடி, கண்ணப்பமூலை, அனந்தமங்கலம், காழியப்பநல்லூர், திருக்களாச்சேரி, ஆயப்பாடி, காட்டுச்சேரி, மாங்குடி, தில்லையாடி, திருவிடைக்கழி, விசலூர், எடுத்துக்கட்டி சாத்தனூர், கண்ணங்குடி, கிள்ளியூர், டி.மணல்மேடு, மாத்தூர் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இதேபோல் கிடாரங்கொண்டான் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் கிடாரங்கொண்டான், செம்பனார்கோவில், மேலப்பாதி, கீழையூர், கருவாழக்கரை, காளகஸ்திநாதபுரம், திருச்சம்பள்ளி, ஆக்கூர், ஆக்கூர் கூட்டுரோடு, அனப்பன்பேட்டை, மடப்புரம், மாமாகுடி, சின்னங்குடி, சின்னமேடு, பூந்தாழை, தலைச்சங்காடு, கருவி, செம்பதனிருப்பு, மற்றும் அதனை சார்ந்த கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×