என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பள்ளி மாணவர்களின் பிரச்சினைகளை தீர்க்க உளவியல் ஆலோசனை மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா?
Byமாலை மலர்16 Nov 2021 11:27 AM IST (Updated: 16 Nov 2021 11:27 AM IST)
பள்ளிதோறும் மாணவர்களை சந்திப்பது, அவர்களது பிரச்சினைகளை பதிவு செய்வது, ஆசிரியர்களுக்கு பயிற்சி எடுப்பது என உளவியல் ஆலோசகர்களுக்கான பணி வரன்முறைகள் நிர்ணயிக்கப்பட்டன.
திருப்பூர்:
கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு இருக்கும் மன அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கடந்த 2013ல் நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் உருவாக்கப்பட்டது. இதில் கல்வி மாவட்டங்களை இணைத்து 10 மண்டலங்களில் உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிதோறும் மாணவர்களை சந்திப்பது, அவர்களது பிரச்சினைகளை பதிவு செய்வது, ஆசிரியர்களுக்கு பயிற்சி எடுப்பது என உளவியல் ஆலோசகர்களுக்கான பணி வரன்முறைகள் நிர்ணயிக்கப்பட்டன. ஈரோடு, திருப்பூர் மாவட்டத்திற்கு ஒரு உளவியல் நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உளவியல் நிபுணர் தலைமையிலான குழு பள்ளிகள் தோறும் மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். கொரோனாவுக்கு பின் இதன் செயல்பாடு முடங்கியுள்ளது.
இதுகுறித்து கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மற்றும் கல்வியாளர் மூர்த்தி கூறியதாவது:
பள்ளிகளில் நடைபெறும் பாலியல் வன்முறை சம்பவங்கள் பல சந்தர்ப்பங்களில் வெளியே தெரிவதில்லை. புகார் கொடுத்தாலும் பள்ளி நிர்வாகங்கள் அந்த புகார்களை முறையாக விசாரிப்பதில்லை. பாலியல் சீண்டல்கள், பருவ மாறுபாடு, உடலியல் சார்ந்த பிரச்சினைகள் என மாணவிகள் முன்வைக்கும் பிரச்சினைகள் ஏராளம்.
இப்பாதிப்புகள் குறித்து பெற்றோர்களிடமும் சொல்ல முடியாமல், நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தவிப்பது வாக்குமூலத்தின் வாயிலாக அறிய முடிகிறது.
சில இடங்களில் பெற்றோர்களது அளவுக்கதிகமான கண்டிப்பால், இடைநிற்றலை தழுவ வேண்டி வருமோ என்ற அச்சத்தில் வெளி வட்டாரங்களில் நடக்கும் பிரச்சினைகளை வீட்டில் பகிர்வது குறைந்து வருகிறது. சில பெற்றோர்களுக்கு குழந்தைகள் சொல்வதை கேட்ககூட நேரமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறுகையில்:
கொரோனாவுக்கு பின் நடமாடும் உளவியல் ஆலோசனை குழு முடங்கி விட்டது. பள்ளிகள் மீண்டும் செயல்பட துவங்கியது முதல் கடந்த ஒரு மாதமாக தேசிய மகளிர் ஆணையம், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இணைந்து பள்ளி, கல்லூரிகளில் இதுகுறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. உளவியல் ரீதியான ஆலோசனை குழு மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X