search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பல்லடம் அருகே 300 ஆண்டு பழமை வாய்ந்த கால்நடை தொட்டி கண்டுபிடிப்பு

    தொட்டியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் உள்ளதை படித்ததில் தொட்டி 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என்பது தெரிய வந்தது.
    பல்லடம்:

    நூற்றாண்டுக்கு மேலான பழமையான தொட்டியை பல்லடம் அருகே வரலாற்று ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    இதுகுறித்து பல்லடம் வரலாற்று மையம் குழுவை சேர்ந்த பாண்டியன் கூறியதாவது:

    பல்லடம் வட்டாரத்தின் வரலாற்று சிறப்புகள், தொல்லியல் சார்ந்த பொருட்கள், கட்டிட கலை, சிற்பங்கள் ஆகியன குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். அவ்வாறு பல்லடம் அருகே ஆறாக்குளம் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அருகே பழமையான கால்நடை தொட்டி ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தொட்டியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் உள்ளதை படித்ததில் தொட்டி 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என்பது தெரிய வந்தது. அன்றைய காலகட்டத்தில் மாட்டு வண்டிகளே பிரதானமாக இருந்துள்ளன. 

    கால்நடைகளின் தாகம் தீர்க்க வேண்டி ஆறாக்குளம் கிராமத்தை சார்ந்த ஒருவர் கால்நடை தொட்டியை உபயமாக வழங்கியுள்ளார். இதேபோல் ஒரு கி.மீ., தூரத்துக்குள் இன்னும் தொட்டிகள் இருக்க வாய்ப்பு உள்ளது. 

    தொட்டியில் உள்ள வாசகங்கள் தெளிவாக இல்லை. பல எழுத்துகள் மறைந்துள்ளன. நம் முன்னோர்களின் பொக்கிஷமான இவை நம் நாகரீகத்தை பறைசாற்றுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×