என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
செழித்து வளர்ந்த சோளத்தட்டுகள் - காங்கேயம் விவசாயிகள் மகிழ்ச்சி
அறுவடை செய்த சோளத்தட்டுகளை போர் அமைத்து சேமித்து வைத்து மழை பெய்யாத வறட்சியான காலங்களில் கறவை மாடுகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது.
காங்கேயம்:
சோளத்தட்டுகள் கால்நடைகளுக்கு மழை பெய்யாத வறட்சியான காலங்களில் அளிக்கப்படும் முக்கிய தீவனம் ஆகும். விவசாயிகள் மழை பெய்யும் காலங்களில் தங்கள் விவசாய நிலங்களில் பயிறு வகைகள் பயிரிடாத போது, விவசாய நிலங்களை வெறுமனே விடாமல் மழை பெய்யும் காலங்களில் ஈரப்பதம் மிக்க நிலங்களை உளவு செய்து, அதில் கால்நடைகளின் முக்கிய தீவனமான சோளம் விதைக்கப்படுகிறது.
பின்பு நன்கு வளர்ந்த பின்பு அதை அறுவடை செய்யப்படுகிறது. அறுவடை செய்த சோளத்தட்டுகளை போர் அமைத்து சேமித்து வைத்து மழை பெய்யாத வறட்சியான காலங்களில் கறவை மாடுகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் காங்கேயம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் தங்கள் ஈரப்பதமான நிலங்களில் உழவு செய்து சோளங்களை பயிரிட்டனர்.
தற்போது இந்த சோளங்கள் நன்கு செழித்து சோளத்தட்டுகளாக வளரத் தொடங்கியுள்ளது. இதனால் சோளங்களை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story