என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
சிதலமடைந்து கிடக்கும் திருமூர்த்தி அணை பூங்கா - சுற்றுலா பயணிகள் கவலை
பூங்காவிலுள்ள விளையாட்டு உபகரணங்கள், இருக்கை, விலங்குகளின் உருவங்கள் உடைந்தும், துருப்பிடித்தும் காணப்படுகிறது.
உடுமலை;
உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை ஆன்மீகம் மற்றும் சுற்றுலா மையமாக உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்கு திருமூர்த்தி அணைப்பகுதியில், பாலாறு அணை மதகு அருகில் 2 இடங்களில் பொதுப்பணித்துறை சார்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர் விளையாட்டு பூங்கா, உபகரணங்கள், இருக்கை, செயற்கை நீரூற்றுக்கள், மின் விளக்குகள் மற்றும் விலங்குகள் உருவங்கள் என அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்கா பராமரிப்பு இல்லாமல் சுற்றுலா பயணிகளை அனுமதிக்காமல் பூட்டியே வைக்கப்பட்டு வீணாகி வருகிறது. பூங்காவிலுள்ள விளையாட்டு உபகரணங்கள், இருக்கை, விலங்குகளின் உருவங்கள் உடைந்தும், துருப்பிடித்தும் காணப்படுகிறது.
இதனால் திருமூர்த்தி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே திருமூர்த்தி அணைப் பூங்காவை பராமரித்து சுற்றுலா பயணிகளுக்கு திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story






