என் மலர்

  செய்திகள்

  வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
  X
  வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.

  எடப்பாடி அருகே பெருமாள் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இன்று நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் முன்னாள் முதல்-அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
  எடப்பாடி:

  சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெடுங்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.

  இந்த கோவிலில் புனரமைப்பு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. சமீபத்தில் திருப்பணிகள் முழுவதும் நிறைவு பெற்ற நிலையில் இன்று காலை ஆலயத்தின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

  முன்னதாக காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு யாக சாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பல்வேறு வேள்விகள் செய்யப்பட்டு சிவாச்சாரியர்கள் ஆலய கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் முதல்-அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அப்பகுதி பொதுமக்களுடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு ஆலய நிர்வாக குழு சார்பில் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.  Next Story
  ×