search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    உடுமலை பகுதியில் டிரான்ஸ்பார்மர்கள் சீரமைப்பு பணிகள் தீவிரம்

    மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சில பகுதிகளில் மின்வினியோகம் தடைபடுகிறது. நீண்ட நேரம் மின்சாரமின்றி தொழில்துறையினரும் மக்களும் பாதிக்கின்றனர்.
    உடுமலை:

    உடுமலை மின் பகிர்மான வட்டத்தில் வீடு, தொழில் நிறுவனங்களுக்கு  உயரழுத்தம் மற்றும் தாழ்வழுத்தம் என பல லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 

    இவற்றுக்கான மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. குடியிருப்பு வீடுகள் அதிகரித்தும் வரும் நிலையில் மின் அழுத்த மாறுபாடு ஏற்படுவதை தவிர்க்க ஆங்காங்கே புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தற்போது மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சில பகுதிகளில்  மின்வினியோகம் தடைபடுகிறது. நீண்ட நேரம் மின்சாரமின்றி  தொழில்துறையினரும் மக்களும் பாதிக்கின்றனர். 

    இதனால் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட டிரான்ஸ்பார்மர்களை ஆய்வு செய்து அவைகளில் பராமரிக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், மழைப்பொழிவின் தாக்கம் அதிகரிப்பதால் டிரான்ஸ்பார்மர்கள் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ள மின்னல் கடத்தியின் விவரங்கள் அதன் தன்மை உள்ளிட்டவைகளை சேகரிக்கும் பணி நடக்கிறது. 

    டிரான்ஸ்பார்மர் அளவு, நிலத்தின் தன்மை, பீடர்கள், கடைசியாக பராமரித்த நாள் போன்ற பல்வேறு விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. 

    பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றனர்.
    Next Story
    ×