search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேறும் சகதியுமாய் காட்சியளித்த உடுமலை சந்தை வளாகம்.
    X
    சேறும் சகதியுமாய் காட்சியளித்த உடுமலை சந்தை வளாகம்.

    தொடர் மழையால் சகதியான உடுமலை சந்தை வளாகம்

    வாகனங்கள் செல்ல முடியாமலும், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமலும், சேற்றில் வழுக்கி விழும் ஆபத்தான நிலையில் நடந்து செல்லும் அவல நிலை காணப்படுகிறது.
    உடுமலை:

    உடுமலை நகராட்சி சந்தையில் சுற்றுப்புற பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்து ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர். கேரளா மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு காய்கறிகள் லாரிகள் வாயிலாக விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
     
    மேலும் 300க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் மளிகை கடைகளுடன் தினசரி சந்தை செயல் படுகிறது. தினமும் பல ஆயிரக்கணக்கான சிறு விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக சந்தை வளாகம் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. பல இடங்களில் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் குட்டை போல் தேங்கி உள்ளதால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது.

    வாகனங்கள் செல்ல முடியாமலும், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமலும், சேற்றில் வழுக்கி விழும் ஆபத்தான நிலையில் நடந்து செல்லும் அவல நிலை காணப்படுகிறது. மேலும் வீணாகும் காய்கறி கழிவுகளை வளாகத்திற்குள் கொட்டப்பட்டு பல மாதமாக அகற்றப்படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது.

    அத்தோடு நிரந்தர கட்டடங்கள் இல்லாமல் திறந்த வெளியில் கடைகள் அமைக்கப்படுகிறது. மழையில் நனைந்து கொண்டே வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

    எனவே சந்தை வளாகத்திற்குள் மழைநீர் வடிகால் வசதி செய்யவும், சேறும் சகதியுமாக மாறிய ரோட்டை சரிசெய்யுவும், துர்நாற்றம் சுகாதாரகேடு ஏற்படுத்தி வரும் காய்கறி கழிவுகளை அகற்ற வேண்டும்.

    சந்தை வளாகத்தில் நிரந்தர கடைகள் அமைக்க காங்கிரீட் தளம் அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×