என் மலர்
செய்திகள்

மரம் நடும் விழா திட்டத்தை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்த காட்சி.
தாராபுரத்தில் மரம்நடும் விழா-அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்
தாராபுரம் மற்றும் தாராபுரத்தை சேர்ந்த கோவில்கள் அனைத்திலும் உள்ள 190 கோவில்களில் தலா ஐந்து மரங்கள் என 950 மரங்கள் கோவில் வளாகத்தில் நடப்பட்டு மரங்கள் பராமரிக்கப்படும் எனக்கூறினார்.
தாராபுரம்:
தாராபுரத்தில் நடை பெற்ற விழாவில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு அகத்தீஸ்வரர் கோவிலில் ஐந்து மரங்களையும், தாராபுரம் காடு அனுமந்தராய சுவாமி கோவிலில் ஐந்து மரங்களையும் நட்டு துவக்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்:-
தாராபுரம் மற்றும் தாராபுரத்தை சேர்ந்த கோவில்கள் அனைத்திலும் உள்ள 190 கோவில்களில் தலா ஐந்து மரங்கள் என 950 மரங்கள் கோவில் வளாகத்தில் நடப்பட்டு மரங்கள் பராமரிக்கப்படும் எனக்கூறினார்.
நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜாமணி, தாராபுரம் நகர செயலாளர் தனசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், உதவி இணை ஆணையர் மேனகா, செயல் அலுவலர் சதீஷ் மற்றும் கோவில் குருக்கள் சுந்தரம், கள்ளப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story