search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து: அரசு பஸ் கண்ணாடி உடைப்பு - சேலம் அருகே 2 பேர் கைது

    சேலம் அருகே வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் இருந்து ராசிபுரத்திற்கு நேற்று அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை ராசிபுரம் அருகே உள்ள பழந்தின்னிபட்டியை சேர்ந்த ரமேஷ் (வயது 50) என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக செந்தில்குமார் இருந்தார்.

    நேற்று இந்த பஸ் கண்டர்குல மாணிக்கம் அருகில் சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேர் பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கல் வீசினர். இதில் முன் பக்க கண்ணாடி உடைந்தது. இதையடுத்து 3 பேரும் தப்பியோடி விட்டனர். இது குறித்து ரமேஷ் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரைணை நடத்தினர்.

    அப்போது பஸ் மீது கல்வீசியது ஆட்டையாம்பட்டி அருகே உள்ள அரியம்பாளையம் பகுதியை சேர்ந்த மூர்த்தி (38), கண்டர் குலமாணிக்கம் பகுதியை சேர்ந்த கந்தசாமி (25), சண்முகம் (36) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து மூர்த்தி மற்றும் சண்முகத்தை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததற்காக பஸ் கண்ணாடியை உடைத்ததாக கூறினர். 2 பேரையும் சிறையில் அடைத்த போலீசார் தலைமறைவான கந்தசாமியை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×