என் மலர்
செய்திகள்

கைது
பாப்பிரெட்டிப்பட்டி அருகே நாட்டுத்துப்பாக்கி பதுக்கிய விவசாயி கைது
பாப்பிரெட்டிப்பட்டி அருகே நாட்டுத்துப்பாக்கி பதுக்கிய விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கல்லாத்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன் (வயது 56). விவசாயி. இவர் நாட்டுத்துப்பாக்கி மூலம் வன விலங்குகளை வேட்டையாடுவதாக தனி பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது தோட்டத்தில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை போலீசார் மீட்டனர்.இதையடுத்து கர்ணனை போலீசார் கைது செய்தனர்.
Next Story






