என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
தாராபுரத்தில் வக்கீல் வீட்டில் நகை-பணம் கொள்ளை
பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரொக்கம் ரூ.20 ஆயிரம் திருட்டு போயிருந்தது.
தாராபுரம்:
தாராபுரம் பொள்ளாச்சி ரோடு செட்டியார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வக்கீல் சுரேஷ்(வயது 37). இவரது மனைவியின் பாட்டி இறந்து விட்டதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுரேஷ் குடும்பத்துடன் அவிநாசி சென்றார். மீண்டும் நேற்று காலை தாராபுரம் வந்தார்.
வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரொக்கம் ரூ.20 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து தாராபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Next Story