search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    குமரி மாவட்டத்தில் 10 மாதத்தில் 42 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    காட்டாத்துறை பகுதியைச் சேர்ந்தவர் சஜின்குமார்(24) இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. போலீசார் எச்சரித்தும் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால் சஜின்குமாரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா புகையிலை விற்பனை செய்பவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகிறார்கள்.

    இது ஒருபுறம் இருக்க தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள். சாமியார் மடம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது24). இவர் மீது தக்கலை, திருவட்டார், இரணியல் போலீஸ் நிலையங்களில் கொலை மிரட்டல் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து பிரசாத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார்.

    பிரசாத் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். காட்டாத்துறை பகுதியைச் சேர்ந்தவர் சஜின்குமார்(24) இவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது. போலீசார் எச்சரித்தும் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால் சஜின்குமாரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    நேற்று ஒரே நாளில் குண்டர் சட்டத்தின் கீழ் 2 பேர் கைது செய்யப்பட்டதையடுத்து குமரி மாவட்டத்தில் கடந்த 10 மாதத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×