search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிகொண்டா அருகே கால்வாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தபோது எடுத்த படம்
    X
    பள்ளிகொண்டா அருகே கால்வாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தபோது எடுத்த படம்

    பள்ளிகொண்டா ஏரி கால்வாயில் உடைப்பு - குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி

    பள்ளிகொண்டா ஏரி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இந்த பகுதியை கலெக்டர் பார்வையிட்டார்.
    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. நேற்று முன்தினம் சுமார் 6 மணி நேரம் கனமழை பெய்ததால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் மோர்தானா அணை நிரம்பி வழிவதால் அதன் இணைப்பு கால்வாய்களில் அதிகளவில் தண்ணீர் வருவதால் கரைகள் உடையும் அபாயம் உள்ளது.

    இந்த நிலையில் பள்ளிகொண்டா ரங்கநாதர் கோவில் பின்புறம் உள்ள ரங்கநாதர் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் மழை நீர் புகுந்தது. மேலும் மோர்தானா கால்வாய் அருகே செல்லும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு அந்த நீரும் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

    தகவலறிந்ததும் பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார். மாவட்ட கலெக்டர் குமராவேல் பாண்டியன், சப்-கலெக்டர், அணைக்கட்டு தாசில்தார், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உள்ளிட்டோர் மோர்தானா கால்வாயை ஆய்வு செய்தனர். அப்போது கால்வாய்களின் கரைகளை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் ரங்கநாதர் நகரில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் படி உத்தரவிட்டார்.
    Next Story
    ×