என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    திமிரியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் திருட்டு

    திமிரியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த திமிரி பார்த்திகாரன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 28). இவர் திமிரி பஜாரில் செல்போன் உதிரிப்பாகங்கள் மற்றும் கிப்ட் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு இரவு ஜீவா வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    நேற்று முன்தினம் காலை கடையைத் திறக்க வந்தபோது, முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.70 ஆயிரத்தை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர்.

    இதுகுறித்து ஜீவா திமிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×