என் மலர்
செய்திகள்

கைது
வாலாஜா டோல்கேட்டில் பைக் திருடிய வாலிபர் கைது
வாலாஜா டோல்கேட் அருகே பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாலாஜா:
வாலாஜா டோல்கேட் அருகே டீ கடை நடத்தி வருபவர் எல்லப்பன். இவர் தனது பைக்கை டீ கடை அருகே நிறுத்தி இருந்தார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து எல்லப்பன் வாலாஜா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அங்கு உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் ஒரு வாலிபர் பைக்கை திருடி செல்வது பதிவாகி இருந்தது. விசாரணையில் அரக்கோணம் அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த மோனீஷ் குமார் (19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது வீட்டில் பதுக்கிவைத்திருந்த பைக் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் மோனீஷ் குமாரிடம் விசாரித்து வருகின்றனர்.

Next Story