என் மலர்

  செய்திகள்

  பறிமுதல் செய்யப்பட்ட லாரி.
  X
  பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

  வெள்ளகோவிலில் அனுமதியின்றி கிரசர் மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லாரி உரிமையாளர் முத்தூர் சங்கரன்பள்ளத்தை சேர்ந்த கேசவன் தப்பி ஓடிவிட்டார்.
  வெள்ளகோவில்:

  திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் முத்தூர் அருகே உள்ள சங்கரம்பள்ளம் அருகே காங்கயம் தாசில்தார் சிவகாமி ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக கிரஷர் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்து விசாரித்தார். அப்போது முறையான உரிய ஆவணங்கள் இன்றி கிரஷர் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.

  லாரி உரிமையாளர் முத்தூர் சங்கரன்பள்ளத்தை சேர்ந்த கேசவன் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து காங்கேயம்  தாசில்தார் சிவகாமி அனுமதியின்றி முறையான ஆவணங்கள் இல்லாமல் கிரஷர் மண் ஏற்றி வந்த கேசவன் மீது கனிமவள விதியின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×