என் மலர்

    செய்திகள்

    தடுப்பூசி போட நாய்களை காரில் அழைத்து வந்த தம்பதி
    X
    தடுப்பூசி போட நாய்களை காரில் அழைத்து வந்த தம்பதி

    தடுப்பூசி போட செல்லப் பிராணிகளை சொகுசாக காரில் அழைத்து வந்த வயதான தம்பதி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அவனை நாய் என்று சொல்லாதீர்கள் சார்... அவன் எங்கள் குழந்தை என்று செல்லமாக கோபித்துக் கொண்டனர் சென்னையை சேர்ந்த வயதான தம்பதியினர்.
    வெறிநாய் கடி தடுப்பூசி தினத்தையொட்டி சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் இன்று சிறப்பு கருத்தரங்கு மற்றும் ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தொடங்கி வைத்தார்.

    கால்நடை மருத்துவ கல்லூரியில் குறைந்த கட்டணத்தில் செல்லப் பிராணிகளான நாய்- பூனைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இன்று ரேபிஸ் தினம் என்பதால் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது. இதற்காக சென்னையில் வசிப்போர் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்- பூனைகளை சொகுசாக கார்களில் அழைத்து வந்திருந்தனர்.

    தடுப்பூசி போட நாய்களை காரில் அழைத்து வந்தவர்.

    தங்கள் குழந்தைகளிடம் பாசத்தை கொட்டுவது போல நாய்- பூனைகள் மீது பாசமழை பொழிந்தனர். ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான சந்திரமவுலி 9 நாய்களை வீட்டில் வளர்த்து வருகிறார்.

    இவர் தனது மனைவியுடன் நாய்களுக்கு தடுப்பூசி போட வந்திருந்தார். 6 நாய்களை தனது காரில் அழைத்து வந்திருந்தார். சந்தோஷ், மினியன், சஞ்சனா, சிபி, சில்க் என 9 நாய்களுக்கு பெயர் வைத்து அழைக்கும் சந்தரமவுலி, ‘சார் நாய் என்று நீங்களும் சொல்லாதீர்கள். அவன் எங்கள் வீட்டு குழந்தை’ என்று பாசத்தை பொழிந்தார்.

    நாய்க்கு தடுப்பூசி போடப்பட்ட காட்சி


    எங்கள் மகனும், மகளும் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அவர்களும் செல்லப் பிராணிகள் மீது தீராத காதல் கொண்டவர்கள். தற்போது இவர்கள்தான் (நாய்களை பார்த்து) எங்கள் பிள்ளைகள் என்று பெருமிதப்பட்டனர்.

    இந்த நாய்கள் அனைத்தும் தெருவில் சுற்றி திரிந்த நாய்கள் ஆகும். அவைகளை வீட்டில் வைத்து சுத்தமாக்கி தம்பதியினர் பராமரித்து வருகிறார்கள்.

    தினமும் கண்ணில் பட்ட நாய்களுக்கு எல்லாம் சாப்பாடு போடுவதை சந்திரமவுலி வழக்கமாகவே வைத்துள்ளார். ஒவ்வொரு நாளும் 50 நாய்கள் இவரால் பசியாறுகின்றன. இதற்காக ஆயிரக்கணக்கில் தினமும் செலவு செய்து வருகிறார்.

    தனது வீட்டில் வளர்க்கப்படும் 9 நாய்களையும் நோய் நொடி அண்டாதபடி பார்த்து, பார்த்து பராமரித்து வரும் அவர், நாய்களுக்கு லேசாக உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க மறப்பது இல்லை. தவறாமல் தடுப்பூசிகளையும் போட்டு வரும் சந்திரமவுலி இன்று தனது செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசிகளை போட்டுவிட்டு அவைகளை காரிலேயே அழைத்து சென்றார்.

    இவரைப் போன்று பலரும் தங்களது செல்லப் பிராணிகளான நாய் மற்றும் பூனைகளை அழைத்து வந்து மிகுந்த ஆர்வத்தோடு அவைகளுக்கு தடுப்பூசிகளை போட்டனர்.

    தடுப்பூசி போட நாயை அழைத்து வந்த காட்சி.


    மோட்டார் சைக்கிள்களின் முன்னால் குழந்தையை போன்று அமர வைத்து பலர் நாய், பூனைகளை அழைத்து வந்திருந்தனர். இப்படி மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த நாய் மற்றும் பூனைகள் உரிமையாளர்கள் சொல்வதை அப்படியே கேட்டு அதன்படி நடந்ததை காண முடிந்தது.

    அசின் என்ற வாலிபர் தனது சகோதரியுடன் 2 பூனைகளை தடுப்பூசி போடுவதற்காக அழைத்து வந்திருந்தார். முபாசா, ஷேஜோ என பூனைகளுக்கு பெயரிட்டு கடந்த 9 மாதங்களாக வீட்டில் பாசத்தோடு வளர்த்து வருகிறார்கள்.

    பூனை

    எங்கள் வீட்டில் இவர்களும் (பூனைகள்) இரண்டு குழந்தைகள். எனது தாய், தந்தையருடன் சேர்த்து 6 பேர் எங்கள் வீட்டில் வசித்து வருகிறோம் என்று பூனைகளையும் வீட்டில் ஒரு அங்கத்தினராக அசின் தெரிவித்தார்.

    இந்த பூனைகளுக்கு உலர் பழங்களை தினமும் கொடுத்து வருகிறார்கள்.

    தடுப்பூசி போடுவதற்காக மேலும் பலர் தங்களது வீடுகளில் செல்லமாக வளர்க்கப்பட்டு வரும் நாய்களை கைகளில் தூக்கியும், இடுப்பில் வைத்துக் கொண்டும் வந்ததை காண முடிந்தது.

    இன்று செல்லப் பிராணிகளான நாய், பூனைகளை அழைத்து வந்த அனைவரும், அவைகளை தங்களது பிள்ளைகள் என்றே அழைத்தனர். பலர் அவன், இவன் என்று நாய்களை பார்த்து கூறியதையும் காண முடிந்தது. இந்த நாய்கள் இரவில் உரிமையாளர்களுடன் ஒன்றாக படுத்து தூங்குவதையும் வழக்கமாக வைத்துள்ளன.

    இதன் மூலம் செல்லப் பிராணிகள்மீது சென்னை வாசிகள் வைத்துள்ள அளவு கடந்த பாசம் வெளிப்பட்டதை காண முடிந்தது.

    தடுப்பூசி போட அழைத்து வந்த நாய்

    வேப்பேரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி போட்டு முடிந்ததும் அடையாள அட்டை ஒன்றையும் டாக்டர்கள் வழங்கினார்கள். அதில், நாய், பூனைகள் வளர்க்கப்படும் முகவரி மற்றும் அடுத்த தவணை தடுப்பூசி எப்போது என்பது போன்ற விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

    அந்த அட்டைகளை பெற்றுக் கொண்ட செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் தங்களது நாய், பூனைகளின் செல்லப் பெயர்களை அதில் எழுதி வைத்துக் கொண்டனர்.

    சென்னையை பொருத்தவரை நாய் மற்றும் பூனைகளை வீடுகளில் வளர்ப்பது சமீப காலமாக மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் நாய்களுக்கான பிரத்யேக உணவு விற்பனை கடைகளும் அதிகளவில் முளைத்து வருகின்றன.

    நன்றியுள்ள ஜீவனான நாய்கள் மீது சென்னை வாசிகள் வைத்துள்ள அளவு கடந்த பாசம் உண்மையிலேயே வியக்க வைக்கிறது.


    Next Story
    ×