என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  அரக்கோணத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரக்கோணத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
  அரக்கோணம்:

  அரக்கோணம் கும்பினிபேட்டை பஸ் நிறுத்தம் அருகே அந்த வழியாக செல்பவர்களை மிரட்டி வழிப்பறி செய்து கொண்டிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அரக்கோணம் சுவால்பேட்டையை சேர்ந்த ஓம் பிரகாஷ் (வயது 25) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இதே போன்று அரக்கோணம் புதிய பஸ் நிலையம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரை சார்ந்த பாபு என்கிற முகேஷ் (24) மற்றும் அபிஷேக் என்கிற அபி (26) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

  அதேபோன்று தக்கோலம் அடுத்த மாங்காட்டுசேரி பஸ் நிறுத்தம் அருகே அந்தவழியாக சென்றவர்களை மிரட்டியும், போக்குவரத்துக்கு இடையூறும் செய்து கொண்டிருந்த மாங்காட்டுசேரியை சார்ந்த கந்தவேல் (38) என்பவரை தக்கோலம் போலீசார் கைது செய்தனர்.
  Next Story
  ×