என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானி அருகே பெய்த கனமழையால் வாழை மரங்கள் சாய்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    பவானி அருகே பெய்த கனமழையால் வாழை மரங்கள் சாய்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    பவானியில் சூறைக்காற்றுடன் மழை- ரூ.2 கோடி மதிப்பிலான வாழை மரங்கள் சேதம்

    கொரோனா காலத்தில் விவசாயத்தை தொடர்ந்து செய்ய முடியாத நிலையில் இது போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் இழப்புகளை வேளாண்மை துறையினர் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஒலகடம் பேரூராட்சிக்குட்பட்ட எட்டிக்கொட்டை தாள பாளையம், கூனாக்க பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சிறு, குறு விவசாயிகள் செவ்வாழை, கதலி, நேந்திரம் உள்ளிட்ட வாழை ரகங்களை பயரிட்டு இருந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு இப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக 50 ஏக்கர் பரப்பளவிலான 50 ஆயிரம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-

    கதலி, செவ்வாழை, நேந்திரம் வாழை ரகங்களை பயிடப்பட்டிருந்து. நேற்றிரவு பெய்த கனமழையால் 2 மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் அடியோடி சரிந்து விழுந்துள்ளது. இதனால் ரூ.2 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

    கொரோனா காலத்தில் விவசாயத்தை தொடர்ந்து செய்ய முடியாத நிலையில் இது போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் இழப்புகளை வேளாண்மை துறையினர் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அறுவடைக்கு தாயார் நிலையில் இருந்த வாழைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    Next Story
    ×