என் மலர்
செய்திகள்

திருப்பூரில் செல்வராஜ் எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசை கண்டித்து திருப்பூரில் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருப்பூர்:
பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் இன்று தி.மு.க.வினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் தங்களது வீடுகள் முன்பு கருப்புக்கொடி கட்டியும், கருப்பு கொடி ஏந்தியும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் தெற்கு மாநகர் பொறுப்பாளர் டி. கே.டி. நாகராஜ், வடக்கு மாநகர் பொறுப்பாளர் தினேஷ் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் வீடுகள் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story