என் மலர்
செய்திகள்

விசாரணை
கொடநாட்டில் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மரணம் குறித்து மீண்டும் விசாரணை
கணினி ஆபரேட்டர் சம்பவம் நடந்த சில தினங்களில் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரது குடும்பத்தினர் அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்து வந்தனர்.
ஊட்டி:
கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக போலீசார் மறு விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட சயான், ஜம்சீர் அலி மற்றும் எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்ளிட்டோரிடம் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டர் தினேஷ் குமார் சம்பவம் நடந்த சில தினங்களில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு முதலில் தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவரது குடும்பத்தினர் அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்து வந்தனர்.
இதன் காரணமாக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மரணம் பற்றி மீண்டும் விசாரிக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்... தஞ்சம் புகுந்த ஹைத்தி அகதிகளை விமானங்களில் ஏற்றி திருப்பி அனுப்பும் அமெரிக்கா
Next Story






