என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  மனைவி இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கருணை பிரகாஷ்க்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.
  குண்டடம்:

  குண்டடம் அடுத்த மேற்குசடையபாளையத்தை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 57) , விவசாயி. இவரது மகன் கருணை பிரகாஷ் (35). இவரும் விவசாயம் செய்து வந்தார்.

  கருணை பிரகாஷ்க்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தநிலையில் மனைவி திடீரென இறந்துவிட்டார்.

  இதனால் கருணை பிரகாஷ் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விரக்தியில் இருந்த கருணை பிரகாஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

  இதுகுறித்த புகாரின் பேரில் குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×