என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பள்ளிபாளையம் அருகே மது விற்ற வாலிபர் கைது

    பள்ளிபாளையம் அருகே மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் ஒட்டமெத்தை அருகே ஒரு வாலிபர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். பள்ளிபாளையம் போலீசார் ரோந்து சென்றபோது போலீசாரை பார்த்த அந்த வாலிபர் அங்கிருந்து நைசாக தப்பி செல்ல முயன்றார். ஆனால் அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த லோகநாதன் (வயது 27) என்பதும், அவருடைய பையில் 32 மது பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 32 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் லோகநாதனை கைது செய்தனர்.
    Next Story
    ×