என் மலர்

  செய்திகள்

  வழக்கு பதிவு
  X
  வழக்கு பதிவு

  விருதுநகரில் பிரபல கம்பெனியின் பெயரை பயன்படுத்தி போலி பேப்பர் கப் தயாரித்து விற்பனை- 4 பேர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விருதுநகரில் பிரபல கம்பெனியின் பெயரை பயன்படுத்தி போலி பேப்பர் கப் தயாரித்து விற்பனை செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  விருதுநகர்:

  விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி.கே.என் ரோட்டை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 60). இவர் எளிதில் மக்கக் கூடிய வகையில் பேப்பர் கப் தயாரித்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறார்.

  கடந்த 4 மாதத்தில் இவருக்கு ரூ.25 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. இது குறித்து ஆராய்ந்த போது தாமோதரன் கம்பெனியின் உரிமத்தை பயன்படுத்தி போலி பேப்பர் கப் கடைகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

  இதனை சிவகாசியை சேர்ந்த ஜனா, ஜீவா, கரீம், பெங்களூர் கிரண் ஆகிய 4 பேர் போலியாக பேப்பர் கப் தயாரித்து கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இதனால் நஷ்டம் ஏற்பட்டது தெரியவந்தது.

  இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

  Next Story
  ×