என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    புதுவை ஓட்டல் விடுதியில் தங்கியிருந்த காஞ்சிபுரம் வாலிபர் உயிரிழப்பு

    புதுவை ஓட்டல் விடுதியில் தங்கியிருந்த காஞ்சிபுரம் வாலிபர் குடிபோதையில் கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
    புதுச்சேரி:

    புதுவை காமராஜர் சாலையில் ஒரு ஓட்டல் விடுதியில் கடந்த 13-ந் தேதி ஒரு வாலிபர் காஞ்சிபுரத்தை அடுத்து சோழிங்கநல்லூர் கோவிந்தநாயக்கர் வீதி 3-வது குறுக்கு தெரு ரகுநந்தன் (வயது39) என்ற முகவரியை கொடுத்து தங்கினார்.

    அவருக்கு விடுதி ஊழியர் லெனின் உணவு உள்ளிட்ட தேவையான உதவிகளை செய்து வந்தார்.

    நேற்றுமுன்தினம் இரவு ரகுநந்தன் பழம் வாங்கி வருமாறு விடுதி ஊழியர் லெனினிடம் கூறியதையடுத்து அவர் பழங்களை வாங்கி வந்து ரகுநந்தனிடம் கொடுத்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி வரை ரகுநந்தன் தங்கியிருந்த அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி மானேஜர் சண்முகம் மற்றும் ஊழியர் லெனின் ஆகியோர் ரகுநந்தன் தங்கியிருந்த அறைக்குள் சென்று பார்த்தனர்.

    அப்போது தரையில் தலைகுப்புற கவிழ்ந்த நிலையில் தலையில் ரத்த காயங்களுடன் ரகுநந்தன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதிக குடிபோதையில் ரகுநந்தன் கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×