search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்வு செய்யப்பட்ட ஆரோக்கிய குழந்தைக்கு அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பரிசு வழங்கியபோது எடுத்த படம்
    X
    தேர்வு செய்யப்பட்ட ஆரோக்கிய குழந்தைக்கு அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பரிசு வழங்கியபோது எடுத்த படம்

    பெண்களின் கையில் குடும்ப ஆரோக்கியம்- அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சொல்கிறார்

    ஊட்டச்சத்து கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் போட்டியில் தேர்வான ஆரோக்கிய குழந்தைகளுக்கு பரிசு வழங்கினார்.
    வில்லியனூர்:

    அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத தொடக்க விழா மற்றும் மாத்ரு வந்தனா சப்தா நிறைவு விழா மங்கலம் தொகுதி வடமங்கலத்தில்தனியார் திருமண நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அங்கு அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து கண்காட்சியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பார்வையிட்டார். போட்டியில் தேர்வான ஆரோக்கிய குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    விழாவில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பேசியதாவது:-

    குடும்பத்தின் ஆரோக்கியம் பெண்களின் கையில் தான் உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாததால் தான் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் நோய்கள் வருகிறது. பெரும்பாலான பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சத்து குறைவு நோய் உள்ளதாக இங்கு பேசியவர்கள் குறிப்பிட்டனர். அதற்கு காரணம் மார்க்கெட்டில் உள்ள கலப்பட பொருட்கள் தான். பெண்கள், தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே பயிரிட்டு சாப்பிட முடியும். இதை செய்தால் குடும்பத்தின் ஆரோக்கியம் மேம்படும். அதற்கு அரசு சார்பில் விதைகளும், செடிகளும் வழங்கப்படுகிறது. அரசின் சலுகைகளை பயன்படுத்தி ஆரோக்கியமான குழந்தைகளை வளர்க்குமாறு தாய்மார்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மகளிர் மேம்பாட்டு துறை செயலர் உதயகுமார், இயக்குனர் அசோகன் மற்றும் திட்ட அதிகாரி ரத்னா, டாக்டர் பிரேமா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×