search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூரில் முறைகேடாக இயங்கிய 40 கல்குவாரிகள் மீது வழக்கு-அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

    அபராதம் செலுத்தாமல் அனைத்து குவாரிகளையும் முறைப்படுத்த வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவுக்கு உட்பட்ட மொரட்டுப்பாளையம், ஏ.பெரியபாளையம் பகுதியில் உள்ள கல்குவாரிகளில் விதிமுறையை மீறி  கல் வெட்டி எடுக்கப்பட்டதாக கடந்த  2017ம் ஆண்டு புகார் எழுந்தது. இதுதொடர்பாக  சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஒரு சில கல் குவாரிகள் விதிமுறையை மீறி இயங்கியது உறுதி செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் அபராதம் செலுத்தாமல் அனைத்து குவாரிகளையும் முறைப்படுத்த வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் குவாரிகளின் தற்போதைய நிலை குறித்து கண்டறிய வக்கீல் குழு அமைக்கப்பட்டது. கடந்த மாதம் இக்குழுவினர் வருவாய்த்துறையினருடன் சென்று  ஆய்வு நடத்தி அறிக்கையை ஐகோர்ட்டில் சமர்ப்பித்தனர்.

    இந்தநிலையில்மொரட்டுப்பாளையம், ஏ.பெரியபாளையம் கிராமத்தில் உரிமம் இல்லாமலும், நிபந்த னைகளை மீறியும் செயல் பட்ட கல்குவாரிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து ஊத்துக்குளி தாசில்தார் ஜெகதீஷ்குமார் புகார் அளித்ததையடுத்து ஊத்துக்குளி போலீசார் 40 கல் குவாரிகள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    முறைகேடாக இயங்கிய கல்குவாரிகள் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தனர். வக்கீல் குழு ஆய்வு செய்து கல்குவாரிகளின் முறைகேடுகள் குறித்து அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பித்தது.

    இதையடுத்து முறை கேடாக இயங்கும் குவாரிகளை மூட திருப்பூர் கலெக்டருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த குவாரிகளுக்கு எதிராக மட்டுமில்லாமல் அவற்றை செயல்பட அனுமதித்த கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவும், வருவாய் இழப்பை அவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. 

    ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அதிகாரிகள் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    Next Story
    ×