என் மலர்
செய்திகள்

அதிமுக
பெரம்பலூரில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைக்கும் சட்ட முன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூரில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்காக சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் அ.தி.மு.க.வினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் செய்தனர்.
அதன் ஒரு பகுதியாக பெரம்பலூரில் அ.தி.மு.க. வினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்டசெயலாளருமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் பழைய பேருந்து நிலையத்தில், மறியல் செய்து கண்டண கோஷங்களை எழுப்பினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், நகர செயலாளர் ராஜபூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த சாலை மறியலால் பழைய பேருந்து நிலையம் காந்திசிலை அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புபணியில் ஈடுப்பட்டிருந்த போலீசார் அதிமுகவினரை கைது செய்தனர்.

Next Story