என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார் வீலுக்கு பூட்டு போட்ட போக்குவரத்து போலீசார்.
    X
    கார் வீலுக்கு பூட்டு போட்ட போக்குவரத்து போலீசார்.

    உடுமலையில் சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அபராதம்

    டிரைவர்கள் இல்லாமல் தளி ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை ‘வீல் லாக்‘ அமைத்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    உடுமலை:

    உடுமலை தளி சாலை உள்ளிட்ட பிரதான போக்குவரத்து சாலைகளை  ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, கடைகளுக்கு வரும் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. 

    இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், எஸ்.ஐ., குருமூர்த்தி தலைமையிலான போலீசார் அபராதம் விதித்தனர். 

    மேலும் டிரைவர்கள் இல்லாமல் தளி ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை ‘வீல் லாக்‘ அமைத்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதே போல் வெங்கடகிருஷ்ணா ரோடு, ராஜேந்திரா ரோடு, கல்பனாரோடு உள்ளிட்ட பிரதான ரோடுகளை ஆக்கிரமித்து தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகிறது. 

    எனவே மக்கள் நெரிசல் மிகுந்த சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×