என் மலர்
செய்திகள்

மனு அளிக்க வந்த பொதுமக்கள்.
ஆக்கிரமிப்பு வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற உத்தரவு
வடகிழக்கு பருவமழையால் ஓடையில் வெள்ளபெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்கிருக்கும் குடியிருப்பு வீடுகளை காலி செய்யும்படி நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது.
மடத்துக்குளம்:
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தங்கம்மாள் ஓடை உள்ளது. புறம்போக்கு இடமான இந்த ஓடை பகுதியில் சாதிக் நகர், யு.கே.சி. நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. இதில் அதிகம் பேர் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் வடகிழக்கு பருவமழையால் ஓடையில் வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்கிருக்கும் குடியிருப்பு வீடுகளை காலி செய்யும்படி நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் தண்டபாணி தலைமையில் உடுமலை நகராட்சி அலுவலகத்திற்கு சென்று நகராட்சி, நகரமைப்பு அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில்,மாற்று இடமோ, வீடோ வழங்க வேண்டும். அதுவரை வீடுகளை அப்புறப்படுத்த வேண்டாம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story