என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
உடுமலை வனக்கோட்ட சுற்றுலா தலங்கள் சமூக வலைதளங்களில் பதிவு
வனப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் தங்கும் விடுதிகள் விபரம், கட்டணம் உள்ளிட்டவை அடங்கிய வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளது.
உடுமலை:
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி, உடுமலை வனக்கோட்டங்களை உள்ளடக்கியுள்ளது. அதில் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் பொள்ளாச்சி, டாப்சிலிப், மானாம்பள்ளி, வால்பாறை வனச்சரகங்கள் உள்ளன. கவி அருவி, அட்டக்கட்டி, வால்பாறை, டாப்சிலிப் யானைகள் முகாம் என சுற்றுலா பகுதிகள் ஏராளமாக உள்ளன.
இந்நிலையில் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா ‘ஸ்பாட்’கள், யானைகள் வளர்ப்பு முகாம் குறித்து பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் ‘யூடியூப்’, ‘பேஸ்புக்‘ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதேபோன்று வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகள் விபரம், கட்டணம் உள்ளிட்டவை அடங்கிய வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளது. அதில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம், இசை வாசிக்கும் வீடியோக்களும் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.
இதுகுறித்து உடுமலை வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
யானைகள் வளர்ப்பு முகாம் குறித்து மக்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் வகையில் ‘ஆனைமலை டைகர் ரிசர்வ்’ என்ற பெயரில் ‘யூடியூப், பேஸ்புக்‘ துவங்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யூடியூப்பில், anamalai tiger reserve pollachi division official என்ற பெயரிலும், வெப்சைட்டில், www.atrpollachi.com ; anamalaitigerreserve pollachi என்ற பெயரிலும் துவங்கப்பட்டுள்ளது. வனத்தை பற்றி அறிந்து கொள்ள சமூக வலைதளங்களை பார்வையிடலாம்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story