என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நாவல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

    அறுவடை செய்வதில் சிரமம் இருந்தாலும் வியாபாரிகள் நேரடியாக தோட்டத்துக்கு வந்து அவர்களே பழங்களைப் பறித்து எடுத்துச்செல்கிறார்கள்.
    உடுமலை:

    நாவல் சாகுபடியில் வருவாய் ஈட்டுவதற்கு சுமார் 10 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். மரங்களிலிருந்து அறுவடை செய்வது சுலபமான விஷயம் இல்லை என்பதால் விவசாயிகள் நாவல் சாகுபடியில் ஆர்வம் காட்டாததற்கு கூறப்படும் காரணங்களாகும். இருப்பினும் உடுமலை பகுதியில் விவசாயிகள் சிலர் நாவல் சாகுபடி செய்து வருகின்றனர். 

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    ராம் ஜாமூன் எனப்படும் வட இந்திய ரக நாவல் மரங்களே தற்போது சாகுபடி செய்யப்படுகிறது. ஆரம்ப கட்டங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. வறட்சியைத் தாங்கி நீண்ட காலம் வரை மகசூல் கொடுக்கக்கூடியது.

    முழுவதும் இயற்கை முறையில் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி சாகுபடி மேற்கொண்டுள்ளோம். இதனால் நல்ல மகசூல் கிடைப்பதுடன், பழங்கள் மிகவும் சுவையானதாக இருக்கிறது. 

    அறுவடை செய்வதில் சிரமம் இருந்தாலும் வியாபாரிகள் நேரடியாக தோட்டத்துக்கு வந்து அவர்களே பழங்களைப் பறித்து எடுத்துச்செல்கிறார்கள். தற்போது வெளிச்சந்தையில் இந்த ரக பழங்கள் ஒரு கிலோ ரூ.300-க்கு மேல் விற்பனையாகிறது.  

    ஆனாலும் விவசாயிகளுக்கு குறைந்த தொகையே கிடைக்கிறது. நேரடியாக சந்தைப்படுத்த முடிந்தால் நல்ல லாபம் ஈட்ட முடியும். விவசாயிகள் தரிசாக விட்டு வைத்திருக்கும் நிலத்தில் நாவல் சாகுபடி செய்து ஆண்டுக்கு ஒருமுறை வருவாய் ஈட்டலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×