என் மலர்tooltip icon

    செய்திகள்

    மல்லிகை பூ
    X
    மல்லிகை பூ

    நாளை வரலட்சுமி விரதம்: பூக்கள் விலை 2 மடங்கு அதிகரிப்பு

    கோயம்பேடு சந்தைக்கு இன்று 60 வண்டிகளில் 30 டன் வரை பூ விற்பனைக்கு வந்துள்ளது. பல இடங்களில் மழை பெய்து வருவதால் சந்தைக்கு வரும் மல்லி பூ வரத்து குறைந்து உள்ளது.
    போரூர்:

    ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கி உள்ளதால் கடந்த ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு முகூர்த்த நாட்கள் வருகிறது.

    திருமணம், பண்டிகை உள்ளிட்ட விஷேச நாட்கள் அடுத்தடுத்து வர உள்ளன.

    நாளை முகூர்த்த நாள் மற்றும் வரலட்சுமி விரதம், நாளை மறுநாள் ஓணம் பண்டிகை என்பதால் பூக்கள் விலை 2 மடங்கு அதிகரித்து உள்ளது.

    கோயம்பேடு சந்தையில் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்ற சாமந்தி பூ விலை அதிகரித்து இன்று ரூ.140-க்கும், ரூ.200-க்கு விற்ற அரளி ரூ.300-க்கும், ரூ.100-க்கு விற்ற ரோஜா ரூ.150-க்கும், ரூ.200-க்கு விற்ற முல்லை ரூ.400-க்கும், ரூ.350-க்கு விற்ற மல்லி ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மொத்த வியாபாரி மூக்கையா கூறியதாவது:-

    கோயம்பேடு சந்தைக்கு இன்று 60 வண்டிகளில் 30 டன் வரை பூ விற்பனைக்கு வந்துள்ளது. பல இடங்களில் மழை பெய்து வருவதால் சந்தைக்கு வரும் மல்லி பூ வரத்து குறைந்து உள்ளது.

    பூஜை பொருட்களை வாங்கி செல்லும் பெண்

    நாளை வரலட்சுமி விரதம், முகூர்த்தநாள் என்பதால் பூக்களின் விலை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய பூக்கள் மொத்த விலை விபரம் வருமாறு (கிலோவில்):-

    சாமந்தி பூ - ரூ.140
    அரளி- ரூ.300
    பன்னீர் ரோஸ்- ரூ.150
    சாக்லேட் ரேரோஸ்- ரூ.180
    முல்லை- ரூ.400
    மல்லி- ரூ.600
    கனகாம்பரம்- ரூ.700
    தாழம்பூ (ஒன்று) -ரூ.150
    தாமரை பூ (ஒன்று)-ரூ.7


    Next Story
    ×