என் மலர்
செய்திகள்

மழை
சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை
சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன், கொண்டலாம்பட்டி என அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் நிம்மதியாக தூங்கினர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ஓமலூர், ஏற்காடு, சங்ககிரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன், கொண்டலாம்பட்டி என அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் நிம்மதியாக தூங்கினர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓமலூரில் 22.1 மி.மீ. மழை பெய்துள்ளது. ஏற்காடு-14.4, சங்ககிரி-13.3, சேலம் -12.4, பெத்தநாயக்கன்பாளையம்-8, காடையாம்பட்டி- 7, மேட்டூர் -3.8, ஆனைமடுவு, கரியகோவில் -3, தம்மம்பட்டி- 2, எடப்பாடி -1, வாழப்பாடி -1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 91 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Next Story