என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஸ்ரீமுஷ்ணம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.
    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை கீழ்பாதியை சேர்ந்தவர் அறிவழகன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்றும் பூங்கொடிக்கும், அவரது கணவர் அறிவழகனுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பூங்கொடி வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பூங்கொடி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சோழதரம் போலீசில் புகார் செய்யப்பட் டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 வருடத்தில் இளம்பெண் பூங்கொடி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் சிதம்பரம் ஆர்.டி.ஓ. மதுபாலனும் விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×