என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி பலி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் அய்யனார். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சிவகாசி சொக்கலிங்காபுரத்தில் செயல்பட்டு வருகிறது.

    இங்கு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆலையில் வெடிவிடிபத்து ஏற்பட்டது.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் மீனம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 60) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் சிலர் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

    விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×