என் மலர்tooltip icon

    செய்திகள்

    நூலகத்தில் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் ஆர்வத்துடன் நூல்களை படித்தனர்.
    X
    நூலகத்தில் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் ஆர்வத்துடன் நூல்களை படித்தனர்.

    நூலகங்கள் திறப்பு- போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மகிழ்ச்சி

    முக கவசம் அணிந்தவர் மட்டுமே நூலகத்தின் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
    அருப்புக்கோட்டை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் 2-ம் அலையின்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நூலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
    நூலகங்கள் மூடப்பட்டதால் வாசகர்கள், நூலக உறுப்பினர்கள், நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் என அனைவரும் பெரிதும் சிரமம் அடைந்தனர். இந்தநிலையில் 75 நாட்களுக்கு பிறகு அருப்புக்கோட்டை நாகலிங்க நகரில் உள்ள பொது நூலகம் அரசு வழிகாட்டுதலின்படி மீண்டும் திறக்கப்பட்டது.

    இதனால் போட்டி தேர்வுக்கு தயார் ஆகுபவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து நூலகர் நடராஜன் கூறுகையில்:-

    கொரோனா தொற்று குறைந்ததால் தற்போது நூலகங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இருப்பினும் முக கவசம் அணிந்தவர் மட்டுமே நூலகத்தின் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நூலகத்திற்குள் அனுமதிப்பதில்லை என்றார்.
    Next Story
    ×