என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கோப்புபடம்
லாலாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
By
மாலை மலர்15 July 2021 11:47 AM GMT (Updated: 15 July 2021 11:47 AM GMT)

லாலாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார். குளித்தலை, வேலாயுதம்பாளையத்தில் நடந்த விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர்.
லாலாபேட்டை:
லாலாபேட்டை அருகே உள்ள கள்ளப்பள்ளியை சேர்ந்தவர் வீரமலை (வயது 70). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில்நுட்ப பிரிவில் பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இந்தநிலையில் நேற்று காலை காவிரி ஆற்றில் குளித்துவிட்டு அவரது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்த போது கரூர் -திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்து கொண்டிருந்தார். அப்போது திருப்பூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளை கார்த்திக் (21) என்பவர் ஓட்டி வந்தார். மோட்டார் சைக்கிளின் பின்னால் சக்திவேல் (18) என்பவர் அமர்ந்து இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையை கடந்த வீரமலை மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட வீரமலை, கார்த்திக், சக்திவேல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி வீரமலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக கார்த்திக், சக்திவேல் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை அருகே உள்ள வை.புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (42). இவர் தனது மகன் ராஜேந்திரனை (13) மொபட்டில் அழைத்துக்கொண்டு பஞ்சப்பட்டி அருகே போத்துராவுத்தன்பட்டியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் தனது வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தவர் முருகேசன், ராஜேந்திரன் வந்த மொபட் மீது மோதினார். இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட தந்தை, மகன் 2 பேரும் காயமடைந்தனர். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரவக்குறிச்சி அருகே உள்ள குமரவலசை சேர்ந்த குணசேகரன்(22). இவர் தனது மோட்டார் சைக்கிளில் புகழிமலையில் உள்ள ஒரு திருமண மண்டபம் சாலை வழியாக வேலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் புன்செய்தோட்டக்குறிச்சி மூர்த்திபாளையத்தை சேர்ந்த பெருமாள் (52) என்பவர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக குணசேகரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பெருமாள் மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது. இதில் குணசேகரன், பெருமாள் ஆகியோர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து பெருமாள் ெகாடுத்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
