என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கோப்புப்படம்
உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்
By
மாலை மலர்15 July 2021 4:45 AM GMT (Updated: 15 July 2021 4:45 AM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த இருந்தை கிராமத்தை சேர்ந்தவர் கசீர்ராஜ் (வயது30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 28 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அந்த பெண் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் காதலர்கள் சென்னையிலிருந்து அவர்களது சொந்த ஊருக்கு பஸ்சில் வந்தனர். அப்போது கசீர்ராஜ் அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதில் அந்தப்பெண் கர்ப்பிணியாக இருந்தபோது பழச்சாறு கொடுத்து கர்ப்பத்தை கலைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் கசீர்ராஜிடம் கேட்டபோது அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுதொடர்பாக உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் செய்தார். அதன்பேரில் கசீர்ராஜ் மற்றும் அவரது தந்தை நாயகம், தாய் குளோரின் மேரி, அண்ணன் ஜெயசீலன் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கசீர் ராஜை கைது செய்தனர்.
Next Story
×