search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லடம் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுவாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மதுபிரியர்கள்.
    X
    பல்லடம் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுவாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மதுபிரியர்கள்.

    டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி விற்பனை செய்ய வேண்டுமென டாஸ்மாக் பணி யாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
    திருப்பூர்:

    ஊரடங்கு புதிய தளர்வையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட தொடங்கின. காலை 8மணி முதல் இரவு 8மணி  வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் காலை 8மணி முதலே டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் குவிந்தனர். அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

    கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி விற்பனை செய்ய வேண்டுமென டாஸ்மாக் பணி யாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு மதுபிரியர்கள் வரிசையாக செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் முககவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டும் மதுபாட்டில்கள் வழங்கப்பட்டது. மற்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    முதல் நாள் என்பதால் சில கடைகளில் இன்று காலையே மதுபிரியர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பல இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாததால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    டாஸ்மாக் கடைகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கூட்டம் அதிகமான  இடங்களில் டோக்கன் விநியோகித்து வழங்க அறிவுறுத்தினர்.

    கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்ததால் திருப்பூர், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் 11 மாவட்டத்தை சேர்ந்த மதுபிரியர்கள் அருகில் உள்ள மாவட்டத்திற்கு சென்று மது வாங்கி வந்தனர்.

    திருப்பூர் மாவட்ட மதுபிரியர்கள் அருகில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்று மதுவாங்கி வந்தனர். சிலர் அங்கு மதுவாங்கி வந்து திருப்பூரில் கூடுதல் விலைக்கு விற்றனர். இதையடுத்து திருப்பூர்-திண்டுக்கல் மாவட்ட எல்லையில்போலீசார் அதிரடி வாகன சோதனை நடத்தி மதுபாட்டில்களை கடத்தி வந்தவர்களை கைதுசெய்தனர்.

    வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறி மூடைகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ்காரர்கள் 2 பேர் கூட சிக்கினர். இந்த சம்பவங்களால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் மதுபாட்டில்கள் கடத்தப்படும் சம்பவங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுபிரியர்கள் கூறுகையில், திருப்பூரில் டாஸ்மாக்கடைகள் திறக்கப்படாததால் வெளிமாவட்டங்களுக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி வந்தோம். தற்போது  திறக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.  மேலும் பார்களையும் திறக்க வேண்டும் என்றனர்.

    கொரோனா ஊரடங்கு புதிய தளர்வுகளின்படி திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் ஓட்டல்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டனர். டீ, காபி கடைகளில் பொதுமக்கள் கடைகள் முன்பு நின்று டீ குடித்தனர்.

    தங்கும் விடுதிகள், லாட்ஜ்கள், விருந்தினர் இல்லங்கள் செயல்பட தொடங்கின. அங்குள்ள  உணவகங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன்  செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் ஓட்டல்கள், டீக்கடைகளில் பணிபுரிய கூடுதல் பணியாளர்கள் வந்திருந்தனர். 

    மேலும் இ-பதிவு முறை ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு எந்தவித சிரமமின்றி சென்றனர். இதனால் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் முன்பை விட அதிகரித்து காணப்பட்டது.

    இதையடுத்து பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதிகாரிகள் கடைகள் மற்றும் நிறுவனங்களில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×