என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
காரில் பீர்பாட்டில் கொண்டு வந்தவர் கைது - சோதனை சாவடியில் சிக்கினார்
காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரித்தபோது, அவர் ஈரோடு காந்தி நகரில் வசித்து வரும் திராஜ் ஜெய்ஷாவல் (42) என்பதும் அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இங்கு நேற்று கருங்கல்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், செல்லமுத்து ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது காரில் 21 பீர் பாட்டில்கள் இருந்தன. அவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரித்தபோது, அவர் ஈரோடு காந்தி நகரில் வசித்து வரும் திராஜ் ஜெய்ஷாவல் (42) என்பதும் அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திராஜ் ஜெய்ஷாவல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story






