என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை பல்கலைக்கழகம்
    X
    சென்னை பல்கலைக்கழகம்

    எம்.பில். படிப்பு நடப்பு கல்வியாண்டில் இருந்து நிறுத்தம் - சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

    சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
    சென்னை:

    சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

    சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அதன்படி, 2021-22-ம் கல்வியாண்டில் இருந்து பல்கலைக்கழக துறைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், இணைப்பு மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் எம்.பில். பட்டப்படிப்பு நிறுத்தப்பட வேண்டும்.

    அதன்படி, 2021-22-ம் கல்வியாண்டில் இருந்து இந்த பட்டப்படிப்புகளில் எந்த மாணவர் சேர்க்கையும் நடத்த அனுமதி இல்லை. இதற்கு முந்தைய கல்வியாண்டுகளில் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கால எல்லைக்குள் தங்களுடைய படிப்பை முடித்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
    Next Story
    ×