என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
கொரோனா தொற்று குறைந்த 23 மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி
தமிழகத்தில் வருகிற திங்கட்கிழமை காலையுடன் ஊரடங்கு முடிவுக்கு வர இருக்கும் நிலையில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் கூடுதல் தளர்களுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில் ஏற்கனவே மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் வகை 2-ல் உள்ள அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்டத்திற்குள் பொதுப் பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும். 50 % இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
மாவட்டங்களுக்கிடையே பொதுப் பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி குளிர் சாதன வசதி இல்லாமலும் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
Next Story






