என் மலர்
செய்திகள்

ரேஷன் அரிசி பறிமுதல்
திருவண்ணாமலை அருகே சரக்கு வேனில் கடத்தப்பட்ட 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
சரக்கு வேனில் கடத்தப்பட்ட 1,250 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருவண்ணாமலை:
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு ரேஷன் அரிசி கடத்தி வருவதாக திருவண்ணாமலை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, ஏட்டு கலையரசி மற்றும் போலீசார் நேற்று காலை திருவண்ணாமலை அருகில் உள்ள தண்டரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது விழுப்புரத்தில் இருந்து வந்த சரக்கு வேனை போலீசார் வழிமறித்து சோதனை நடத்தினர். அதில் 50 கிலோ எடை கொண்ட 25 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதன் மொத்த எடை 1,250 கிலோ ஆகும். இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தி வந்த திருவண்ணாமலை தேனிமலை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 46), வள்ளிவாகை பகுதியை சேர்ந்த ஏழுமலை (49) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியையும், சரக்கு வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story