என் மலர்
செய்திகள்

பேட்ரோல் விலை குறித்து அமைச்சர் கருத்து
டுவிட்டரில் டிரென்ட் ஆகிய ‘தேதிபோட்டாங்களா’ ஹேஷ்டேக்
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க தற்போது சாத்தியமில்லை என தமிழக நிதியமைச்சர் தெரிவித்த நிலையில் அதுதொடர்பான ஹேஷ்டேக் டிரென்ட் ஆகியுள்ளது.
தமிழகத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பெட்ரோல் மற்றும் டீசல் விலை, நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் போன்ற பல்வேறு பிரச்சினைகளில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கடுமையாக விமர்சித்தது.
தேர்தலில்போது தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டிருந்தது. குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்த உடன் பெட்ரோல் விலை லிட்டர் 5 ரூபாயும், டீசல் விலை லிட்டர் 4 ரூபாயும் குறைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில்தான் நேற்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க தற்போது சாத்தியமில்லை எனத் தெரிவித்துள்ளார். அப்போது பத்திரிகையாயர்கள் ஆட்சிக்கு வந்த உடன் குறைப்போம் என்று சொன்னீர்களே என்று கேட்டதற்கு, தேதிபோட்டாங்களா, தேதி சொன்னாங்களா என்றார்.
இதனால் டுவிட்டரில் தேதிபோட்டாங்களா என்ற ஹேஷ்டேக்கை டிரென்ட் ஆக்கி, திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
Next Story