என் மலர்
செய்திகள்

தற்கொலை முயற்சி
திருப்போரூர் காவலர் குடியிருப்பில் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி
திருப்போரூர் காவலர் குடியிருப்பில் பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்றது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்போரூர்:
ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் கெஜலட்சுமி (23).
இவர் திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக அங்குள்ள காவலர் குடியிருப்பில் தங்கி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று மாலை பணி முடிந்து தனது அறைக்கு சென்ற கெஜலட்சுமி திடீரென விஷம் குடித்து மயங்கினார். அவரை உடனடியாக மீட்டு திருப்போரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கெஜலட்சுமி மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரை காதலித்து வந்தாக கூறப்படுகிறது. இதற்கு அவரது வீட்டில் எதிர்ப்பு இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனால் கெஜலட்சுமி தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றாரா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






